Saturday, January 31, 2009


கூந்தலில் பூ வாசனை வீசும்; தெரியும்.
இந்த பூவிலோ உன் கூந்தல் வாசனையல்லவா வீசிக்கிறது.

நீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது நீதானா ? தொடபோனால் சிணுங்குவதில்லையே.. நீயா?
முத்தம் கேட்டாள் வெட்கம் தருவதில்லையே...நீயா? கவிதை சொன்னால் நெஞ்சில் சாய்வதில்லையே... நீயா? அருகில் இருந்தும் அந்த வாசனை இல்லையே ...நீயா? வேண்டாம் நீயே வைத்துக்கொள். புகைப்படத்தில் எல்லாம் நீ இருக்க முடியாது.

உன்னை இருட்டில் நிற்க வைத்து என் சந்தேகங்களை தீர்ததுக்கொள்ள வேண்டும்.
வெளிச்சம் என்பது உன்னிடமிருந்துதான் வீசிக் கொண்டிருக்கிறதா.
ஆனால் உன்னை அருகில் வைத்துக்கொண்டு இருட்டை நான் எங்கே தேடுவேன்?

பறப்பதற்கு சிறகு தேவையில்லை. நீயும் காதலும் போதும்...

ஓடாதே ....! நின்று விடப்போகிறது மழை!

எப்போதும் உன் கையில் குடை. மழைக்கா?....வெயிலுக்கா?....
இல்லை வெட்கத்தை மறைக்கவா?

மரங்களுக்கு நடக்கத் தெரிந்திருந்தால் ஒவ்வொன்றும் உன் பின்னால் வந்திருக்கும்.......

உன் பெற்றோரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் மனிதர்கள்தானே.
நீ மட்டும் எப்படி தேவதையானாய்?

Saturday, January 10, 2009


எல்லா கவிதைகளுமே உன்னைப் பற்றியவை என்றாலும் ஒன்று கூட உன்னை மாதிரி இல்ல்லையே

குளித்து விட்டு வந்த நீ அறையில் என்னைப் பார்த்ததும் "நான் ஆடை மாற்ற வேண்டும். ஹாலுக்கு போ" என்றாய். நான் எழுந்து நடக்கையில் ......"போன்னு சொன்னா போயிடறதா" என்று முனகினாய்.அட நீயும் காதலிக்க கற்றுகொண்டாயே

கும்பலில் எல்லாம் போகாதே ....யார் யாரோ மிதிக்கிறார்கள் உன் நிழலை

எனது இரண்டு தோள்களுக்கும் இடையில் பெரும் சண்டை நடக்கிறது உன்னால். எந்த தோளில் நீ முதலில் சாய்வது என்று?

Friday, January 9, 2009


வெள்ளை நிற தலைமுடி, கருப்பு நிற பற்கள். Negative-லும் கூட அழகாய் சிரிக்கிறாய்.

பரிணாம வளர்ச்சியில் பெண்ணிற்கு பின் தேவதை என்பதற்கு நீ ஒருத்தியே சாட்சி

"என்னிடம் உனக்கு என்ன பிடிக்கும்" என்று நீ கேட்டதற்கு நான் பதில் சொன்ன பிறகு, என்னை கடந்து செல்லும்போதெல்லாம் புத்தகம்,பாத்திரம், கைகள் என்று எதைக்கொண்டாவது மறைத்துக்கொண்டு போவாயே.......நினைவிருக்கிறதா?

உன் அக்கா கல்யாணத்தில் "அடுத்த கல்யாணம் இவளுக்குத்தானே" என்று யாரோ சொன்னபோது ஏனோ என்னை கள்ளத்தனமாக
பார்த்தாயே....... நினைவிருக்கிறதா?

அலைகளுக்கும்கூட படிக்கதெரியும் என்று அன்றுதான் தெரிந்து கொண்டேன் .......
கறையில் எழுதிய உன் பெயரை அழிக்காமல் சென்றதிலிருந்து.

ஊரார் கண்பட்டு நான் இளைத்து விட்டேனாம் தாய் எனக்கு திருஷ்டி சுற்றுக்கிறாள். என்ன வேடிக்கை?
உன் கடைக்கண் பார்வை படவில்லை என்றுதானே இளைத்துத் துறும்பானேன்.

நீ பார்க்காமல் போகப்போகும் ஒரு நொடிக்காக காத்திருக்கிறேன் மணிக்கணக்காய்.......

மழையில் நனைந்து வந்த என்னைப்பார்த்ததும் பதறிப்போன நீ , ' இப்படி மழையில் நனைந்தால் காய்ச்சல் வந்திடும்! ' என்று திட்டியபடியே, உன் தாவனியால் என் தலையை துவட்டிவிட்டாய். அடுத்த நாள் எனக்குக் காய்ச்சல்.